இந்த மாதிரி கோலம் போட்டால் கடன் பிரச்சனை கட்டாயம் குறையாது தெரியுமா?

கோலம் போடாத வீட்டில் கண்டிப்பாக மஹாலக்ஷ்மி காலடி எடுத்து வைக்கவே மாட்டாள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் மஹாலக்ஷ்மி வீதியில் வலம் வருவார்களாம். யார் வீட்டு வாசலில் சுத்தம் செய்து அழகிய கோலம் போட்டு வைத்திருக்கிறார்களோ, அவர்களது இல்லத்திற்கு காலடி எடுத்து வைத்து உள்ளே வருவார்களாம். அதனால் தான் அதிகாலையில் கோலம் போடும் வழக்கத்தை நமது முன்னோர்கள் கடைபிடித்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த அவசர யுகத்தில் அவர் அவர் சவுகரியதிற்கு ஏற்ப எந்த நேரத்திலும் கடமையே என்று கோலம் போடுகின்றனர். கோலம் போடுவதில் கூட சாஸ்திரமா? என்றால், ‘ஆம்’ என்றே கூறலாம்.
சிலருக்கு எப்போதும் கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். கடன் தொல்லையில் இருந்து எப்படியாவது விடுபட்டு மீண்டு விட வேண்டும். அதன் பின் இனி கடனே வாங்காமல், உழைப்பதை, இருப்பதை வைத்து வாழ வேண்டும் என்று எவ்வளவோ பேர் தினம் தினம் புலம்பி கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் பாதி நிம்மதியை கெடுப்பது உடன் இருப்பவர்கள் என்றால், மீதி நிம்மதியை கெடுப்பது கடன் வாங்கியிருப்பது தான் காரணமாக இருக்கும். கர்ம வினையில் கடனும் ஒரு பகுதி என்றால் உங்களுக்கு வியப்பிற்கு உரியதாக இருக்கலாம். நீங்கள் செய்த பாவத்தின் பலனில் கடன் வாங்கும் சூழ்நிலையில் தள்ளப்படுவதும் ஒரு பகுதி தான்.
அப்படி வாங்கி வைத்திருக்கும் கடனை அடைத்தாலும், அடுத்த கடன் வாங்க தயாராக ஏதாவது ஒரு பிரச்சனை காத்திருக்கும். என்ன செய்தாலும், எவ்வளவு போராடினாலும் கடனில் இருந்து மீள பெரும் போராட்டமாகவே இருக்கும். சிலர் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் கடனை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருப்பார்கள். ஆனால் பலர் கடனால் தூக்கம் கூட இல்லாமல் தவித்து கொண்டிருப்பார்கள். கடன் பிரச்சனை தீர நீங்கள் வழக்கமாக கோலம் போடுவது அவசியமாகும். காலை, மாலை இருவேளையும் தவறாமல் கோலம் போடுங்கள்.
கோலம் போடுவது வெறும் அழகிற்காக அல்ல. வீட்டில் மஹாலக்ஷ்மி தேவி நுழையவும், ஈ, எறும்புகள் பசி தீரவும் தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை தொடர்ந்து கோலம் போடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த காலத்தில் எதை கொண்டு கோலம் போடுகிறார்கள்? நீங்கள் பச்சரிசி மாவில் தான் கோலம் போடுகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. இன்றைக்கு சந்தையில் விற்கும் கோலமாவு சுண்ணாம்போ, ஏதோ ஒரு கல்லோ பொடித்து தான் விற்பனை செய்கிறார்கள். இதை வாங்கி கோலம் போடுவதில் ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை.
கோலம் போடுவதின் முக்கிய தாத்பரியம் ஓரறிவுள்ள ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது தான். காலையில் பச்சரிசியில் கோலம் போட்டால் மாலைக்குள் பாதியளவு நிச்சயம் எறும்புகள், மற்ற சிறு ஜீவன்கள் உண்டு காலி பண்ணி விடும். சுண்ணாம்பால் கோலம் போட்டால் நாம் தான் நடந்து நடந்து கலைத்து விட வேண்டும். இதில் என்ன பயன் இருக்கிறது? பச்சரிசியில் கோலம் போட்டால் சரியாக வரவில்லை என்பவர்கள் அரிசி அரைக்கும் போதே கோலமாவு பதத்திற்கு அரைக்குமாறு கேளுங்கள். நைசாக இல்லாமல் சற்று கொர கொரவென அரைத்தால் நன்றாக கோலம் போடலாம்.
கர்ம பலன் குறைய தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தர்மம் துணையாக இருக்கும். நீங்கள் பச்சரிசியில் கோலம் போடுவதால் உங்களுக்கே தெரியாமல் சிறு சிறு ஜீவ ராசிகள் பசியாறுகின்றன. இதன் பலனாக உங்களுக்கு இருக்கும் கடன்கள் தொடராமல் இறைவன் அருள் புரிவார். காலை மாலை இருவேளையும் கோலம் போடுவதால் மகாலக்ஷ்மியின் அருளும் கிட்டும். அதை விடுத்து சுண்ணாம்பு பொடியில் கோலம் போட்டால் ஒரு பயனும் இல்லை என்பதே நிச்சயம். அறிவியல் ரீதியாக காலையில் எழுந்து கோலம் போடுவதால் உடலும், மனமும் ஆரோக்கியம் அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,