கர்ணனின் நாகாஸ்திரம்

இந்தப் பதிவு மூன்று பகுதிகளைக் கொண்டது.
1.மகாபாரதத்தில் கர்ண நாகாஸ்திரம் பற்றி சொல்லப்படும் இடங்கள்.
2.கர்ணனால் நாகாஸ்திரம் ஏவப்பட்டபோது நடந்த நிகழ்வு.
3.தவறான கருத்துக்களுக்கான பதில்.

முதலில்...
1.மகாபாரதத்தில் கர்ண நாகாஸ்திரம் பற்றி சொல்லப்படும் இடங்கள்:-
திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் சொல்வது:-
ஓ! சஞ்சயா, வலிமைமிக்கதும், தெய்வீகமானதும், தன் வகையில் முதன்மையானதும், பாம்பைப் போன்ற தலையுடன் கூடியதுமான அந்தக் கணை {நாகாஸ்திரம்} எவ்வாறு பயனற்றதாகச் செய்யப்பட்டது என்பதையும் சொல்வாயாக.(கர்ணன் இறப்பிற்கு பிறகு நடந்த சம்பவத்தை திருதராஷ்டிரர் கேட்பது)


கர்ணன் சல்லியனிடையேயான உரையாடல் :-
ஓ! சல்லியரே, குருதி குடிக்கும் கூரிய வாய்க் கொண்டதும், ஓர் அம்பறாத்தூணிக்குள் தனியாகவே கிடப்பதும், சிறகுகளுடன் ஆயத்தம் செய்யப்பட்டதும், எண்ணெயில் நன்கு தோய்க்கப்பட்டதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதுமான இந்தக் கணையை நான் கொண்டிருக்கிறேன்.(6) சந்தனத்தூளுக்கு மத்தியில் கிடப்பதும், பல ஆண்டுகளாக என்னால் வழிபடப்பட்டு வருவதுமான இது, பாம்பொன்றின் இயல்பையும், வடிவத்தையும் கொண்டிருப்பதால், நஞ்சுமிக்கதாகவும், கடுமையானதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளைக் கொல்லவல்லதாகவும் இருக்கிறது.(7)பயங்கர வடிவமும், அதிக அச்சத்தைத் தரவல்லதுமான இது, கவசங்களையும், எலும்புகளையும் துளைக்கவல்லதாக இருக்கிறது. கோபத்தால் தூண்டப்படும் நான், இதைக் கொண்டு வலிமைமிக்க மேருவின் மலைகளையும் கூடத் துளைக்க முடியும்.(8) பல்குனனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ தவிர வேறு எந்த மனிதனின் மீதும் நான் இக்கணையை ஏவமாட்டேன். இவ்விஷயத்தில் நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன். அதைக் கேட்பீராக.(9)


மகாபாரதத்தின் கர்ண பர்வம் 90 ல் வரும் தகவல்:-
தன் அம்பறாத்தூணிக்குள் தனியாகக் கிடக்கும் அந்தக் கணையின் மீது தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(19)எதிரியைக் கொல்லக்கூடியதும், மிகக் கூரியதும், பாம்பின் வாயைக் கொண்டதும், சுடர்மிக்கதும், கடுமையானதுமான அந்தக் கணையை விதிப்படி பளபளப்பாக்கிய அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பார்த்தனின் அழிவுக்காக வெகுகாலமாகத் தன்னிடம் வைத்திருந்த அதைத் தன் வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான்.(20) கடுஞ்சக்தி கொண்டதும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டதும், தங்க அம்பறாத்தூணியில் சந்தனத் தூளுக்கு மத்தியில் கிடந்ததும், எப்போதும் தன்னால் வழிபடப்பட்டதுமான அந்தக் கணையைப் பொருத்திய கர்ணன், தன் வில்லின் நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, பார்த்தன் மீது அதைக் குறி வைத்தான்.(21) உண்மையில், அந்தப் போரில் பல்குனனின் {அர்ஜுனனின்} தலையை வெட்டுவதற்காகவே, ஐராவதத்தின் குலத்தில் பிறந்த அந்தச் சுடர்மிக்கக் கணையைக் குறி வைத்தான்.அப்போது திசைகளின் அனைத்துப் புள்ளிகளும், ஆகாயமும் எரிந்தன, பயங்கர எரிநட்சத்திரங்களும், இடிகளும் விழுந்தன.(22) வில்லின் நாண்கயிற்றில் கணையின் வடிவிலான அந்தப் பாம்பு பொருத்தப்பட்ட போது, சக்ரனுடன் {இந்திரனுடன்} கூடிய லோகபாலர்கள் உரக்க ஓலமிட்டனர்.

பீஷ்மர் கர்ணனிடம் சொல்லுவது:-
ஒப்பற்றவனும் வழிபடத்தகுந்தவனும், தேவர்கள் தலைவனுமான பெரும் இந்திரன் உனக்கு அளித்த கணை {சக்தி ஆயுதம்}, கேசவனின் {கிருஷ்ணனின்} சக்கரத்தால் தாக்கப்படும்போது, {அந்த சக்தி ஆயுதம்} உடைந்து சாம்பலாகப் போவதை நீ காண்பாய். மலர் மாலைகளைக் கொண்டு உன்னால் மரியாதையாக வழிபடப்படுவதும், பாம்பு வாய்க் கொண்டதும், (உனது அம்பறாத்தூணியில்) ஒளிர்ந்து கொண்டிருப்பதுமான மற்றொரு கணை {நாகாஸ்திரம்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கணைகளால் அடிக்கப்படும்போது, உன்னோடு சேர்ந்து அழிந்து போகும்.
(கர்ணனிடம் பிரம்மாஸ்திரம்,பார்கவாஸ்திரம் போன்ற அதிபயங்கர சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் இருக்க முதன்மையான சக்தி அஸ்திரம், அதன் பிறகு நாகாஸ்திரம் பற்றி பேசுகிறார் பீஷ்மர். இதன் மூலம் அதன்(நாகாஸ்திரத்தின்)சக்தி புரிந்திருக்கும்,கர்ணன் பலத்தை குறைக்கவே இவ்வாறு பேசுகிறார்,அதை அவரே அம்புப்படுக்கையில் இருக்கும் போது கூறுவது அனைவரும் அறிந்ததே)

2.கர்ணனால் நாகாஸ்திரம் ஏவப்பட்டபோது நடந்த நிகழ்வு
பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தான் கொண்ட பகைமையை நிறைவு செய்ய இதுவே நேரம் என்று நினைத்த அவன் {அஸ்வசேனன்}, வேகமாகக் கர்ணனின் அம்பறாத்தூணிக்குள் ஒரு கணையின் வடிவில் புகுந்தான்
(கர்ணனின் திவ்ய நாகாஸ்திரத்தில் காண்டவ வனத்தில் தப்பித்த அஸ்வசேனன் உள்நுழைகிறான்,இது பற்றி கர்ணன் அறியவில்லை,தனது திவ்ய நாகாஸ்திரத்தை பயன்படுத்துகிறான் கர்ணன்)
அதன் பின்....
ஆகாயத்தில் சுடர்விடும் அந்தக் கணையைக் கண்டவனும், கம்சனைக் கொன்றவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, பெரும் வேகத்துடன், தன் பாதத்தால் அந்தச் சிறந்த தேரைக் கீழே அழுத்தி, மிக எளிதாக ஒரு முழம்[5] ஆழத்திற்கு அதை {அந்தத் தேரை} {பூமியில்} மூழ்கச் செய்தான்.(28) இதனால், சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையானவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தங்களைத் தரையில் கிடத்திக் கொண்டன {தரையில் விழுந்தன}. உண்மையில் கர்ணனால் குறிபார்க்க்கப்பட்ட (கணையின் வடிவில் இருந்த) அந்தப் பாம்பைக் கண்டவனும், வலிமையுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மாதவன் {கிருஷ்ணன்}, தன் பலத்தைச் செலுத்தி இவ்வாறு தன் பாதத்தால் அந்தத் தேரைப் பூமிக்குள் அழுத்தியதால், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கி, அந்தத் தேர் மூழ்கிய அந்தப் பூமியில் தங்களைக் கிடத்திக் கொண்டன[6].(29,30) அப்போது ஆகாயத்தில் வாசுதேவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து பேரொலிகள் எழுந்தன. பல தெய்வீகக் குரல்கள் கேட்கப்பட்டன, கிருஷ்ணன் மீது தெய்வீக மலர்கள் பொழிந்தன, சிங்க முழக்கங்களும் செய்யயப்பட்டன. மதுசூதனின் {கிருஷ்ணனின்} முயற்சியால் இவ்வாறு அந்தத் தேரானது பூமிக்குள் அழுத்தப்பட்ட போது,(31) பெருங்கவனத்துடனும், கோபத்துடனும் ஏவப்பட்ட அந்தப் பாம்பாயுதத்தின் இயல்பின் விளைவால், சூதன் மகன் {கர்ணன்} அந்தக் கணையைக் கொண்டு உலகம், ஆகாயம், சொர்க்கம், நீர்நிலைகள் போன்ற அனைத்திலும் கொண்டாடப்பட்ட ஆபரணமும், தன் எதிராளியான அர்ஜுனனின் தலையில் இருந்ததுமான அந்த அற்புத மகுடத்தை வீழ்த்தினான்.(32)
(கிருஷ்ணாரால் தேர் அழுத்தபட்டு அர்ஜூனரின் தலையை குறி வைத்த பாணம் இந்திரன் அர்ஜூனனுக்கு கொடுத்த ({கிரீடமானது}, தேவர்களின் எதிரிகளைக் கொல்ல பார்த்தன் சென்ற போது, தேவர்களின் தலைவனாலேயே {இந்திரனாலேயே} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுக்கப்பட்டதாகும்)அந்த கீரிடம் அந்த திவ்யாஸ்திராத்தால் கீழே விழுந்தது).

கர்ணனின் கோபம் :-
அவ்வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {அஸ்வசேனனிடம்}, “ஓ! பாம்பே {அஸ்வசேனா}, அடுத்தவனின் வலிமையை நம்பி போரில் வெற்றி பெற எப்போதும் கர்ணன் விரும்பியதில்லை. நூறு அர்ஜுனர்களை நான் கொல்ல வேண்டியிருந்தாலும், ஓ! பாம்பே, ஒரே கணையை இருமுறை நான் ஏவமாட்டேன்” என்றான்.
(கர்ணனின் பாணத்தில் உள்நுழைந்ததை கேட்ட கர்ணன் கோபத்தின் உச்சியை அடைகிறான்,அடுத்தவர் சக்தியை நம்பி போரில் வெற்றி பெற விரும்பம் இல்லை என்கிறார்.இதன் பின் தானாக சென்று அர்ஜூனனை தாக்க முற்படும் அஸ்வசேனன் அர்ஜூனன் கணை க்கு இரையாகிறான்,கர்ண நாகாஸ்திரத்தின் சக்தி பற்றியும்,அஸ்வசேனனால் கர்ண நாகாஸ்திரம் விணானதும் இதன் மூலம் தெளிவாகத் தெரியும்,கர்ணனின் மொத்த கோபமும் விதியின் விளையாட்டடும்,இந்த பகுதியில் தெளிவாக புலப்படுத்துகிறது.(அடுத்தவரின் வலிமையில் வெல்ல விரும்பாத கர்ணன் ஏன் சக்திக் கணையை இந்திரனிடம் பெற்றார், அடுத்த பதிவில் மிக விரைவாக)

3.தவறான கருத்துகளுக்கு தரும் பதில்.
கேள்வி 1.கர்ணனிடம் நாகாஸ்திரம் இல்லை என்றார்கள்?
பதில் : இந்த கேள்விக்கான விடை இந்த பதிவின் முதல் பகுதியில், அந்த அஸ்திரத்தின் திவ்யத்துவம் தெரிந்திருக்கும்.
கேள்வி 2. அர்ஜூனனை துளைக்க முற்பட்டது அஸ்வசேனனே, கர்ணனின் கணையே இல்லை?
பதில் :கர்ணனின் திவ்ய கணையில் புகுந்து அதை வீணடித்ததே அந்த அஸ்வசேனனே,திவ்ய கணை ஒரு முறை பயன்படுத்தபட்டதால் மீண்டும் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை கொண்டவன் கர்ணன்(இரண்டாம் முறை தெய்வீக,திவ்ய அஸ்திரங்களை பயன்படுத்துவது ஆபத்து நம்மையே தாக்கும் என்று அர்ஜூனன் கூறியதும் மகாபாரதத்தில் உள்ளது.கொள்ளைகளால் அழிந்த வீரன் கர்ணன் என்பதும் உண்மையே.திவ்ய நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை பயன்படுத்தவில்லை,முதல் முறை அதையும் கெடுத்தான் அஸ்வசேனன்.
கேள்வி 3.நாகாஸ்திரம் சக்தி வாய்ந்த அஸ்திரம் கிடையாது, கட்டுகளை கட்ட மட்டுமே செய்யும் உதாரணம் இராமாயணம்? மேலும் நாகாஸ்திரம் மிக அபாயகரமானது என்று எங்கும் இல்லை?
பதில் :கட்டுகள் இறுக்கபட்டால் உயிர் போய்விடும் ,அப்பறம் நாம் நினைப்பதெல்லாம் எங்க நடக்குது,ருத்ரனின் வஜ்ரத்தை கையில் பிடிப்பது,சுருதாயுதனின் ஆயுதம் பற்றி கூட தான் மகாபாரதம் தவிர எங்கும் இல்லை,பார்காவாஸ்திரம் பற்றி கூட தான் மகாபாரதம் தவிர எங்கும் இல்லை(அதற்காக அவைகள் எளிய ஆயுதங்களா?),அவ்வளவு ஏன் ஸ்தூல கர்ணம்,இந்திரஜாலம்,பாசுபதம் போன்ற ஆயுதங்கள் கெளரவர் தரப்பிலும் உள்ளது என்று மகாபாரதத்தில் உள்ளது,விராட யுத்தத்தில் அனைவரை சாய்த்த ஐந்திரை அஸ்திரம் ,மகாபாரத போரில் பல முறை பயன்படுத்தப்பட்டு முறியடிக்கபட்டது,வசிஷ்டர் (பிரம்மதேஜஸ்,பிராமண தேஜஸ்)பாசுபதம் போன்ற ஆயுதங்களை தடுத்து விஸ்வாமித்திரரை தோல்வி அடைய செய்தார்.அஸ்திரத்திரத்தின் சக்திகளை கலியுகத்தில் வாழும் நாம் கூறக்கூடாது. நாம் கூறுவது சரியா? பீஷ்மர்,திருதராஷ்டிரர்,சல்லியர் கூறுவது சரியா?
கேள்வி 4: உயிரி ஆயுதங்களை மனித யுத்தத்தில் பயன்படுத்தக்கூடாது அது தவறாகும்?
பதில்:இதை Logic (RIP)னு தான் சொல்லனும்.ராட்சஷன் கடோத்கஜன் அலம்புசன் லாம் மோதலாம் நாக ஆயுதத்தை பயன்படுத்தக்கூடாதா? மகாபாரதம் ல இப்படி ஒரு Statement ஐ பாக்க முடியல ,Serial ல தான் பாக்க முடிகிறது.அப்படி பார்த்தால் அர்ஜூனரே சுசர்ம சேனை மீது நாகாஸ்திரம் தொடுத்திருக்கிறார்,அது மட்டும் bio weapon ஆகாதா?சகுனியின் மந்திர ஜால ஆயுதங்கள் பற்றி மகாபாரதத்தில் படிக்கவில்லையா?

இறுதியாக சில உள்ளங்கையில் நெல்லிக்கனி என விளங்கும் உண்மைகள்:
அர்ஜூனன் கர்ணனின் திவ்ய நாகாஸ்திரத்தை எதிர் கணை கொண்டு தடுக்கவில்லை,அர்ஜூனரிடம் அதி பயங்கர அஸ்திரங்கள் உண்டு ,ஆனாலும் தடுக்கவில்லை என்பதே உண்மை (விராட யுத்ததத்தில் ஐந்திரை அஸ்திரத்தை ஏவ மாபெரும் பல அதிபயங்கர அஸ்திரங்களை கொண்ட கெளரவ சேனை அர்ஜூனனின் ஐந்திரை அஸ்திரம் முன்பு சாய்ந்தது. அதே போல சூழ்நிலையே இது) அர்ஜீனர் எதிர்அஸ்திரம் செலுத்தவில்லை.
கிருஷ்ண பரமாத்மா தேரை அழுத்தினார்,அதன் காரணமாகவே தலைக்கு வந்த திவ்யதுவம் வாய்ந்த அஸ்திரம் ,இந்திரன் அர்ஜூனருக்கு அளித்த மகத்துவம் வாய்ந்த கீரிடத்தை தட்டி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றது.
கண்ணியமானக் கேள்விகளுக்கு கண்ணியமான முறையில் comment ல் பதில் வழங்கப்படும்.சந்தேகம் உள்ளவர்கள் தங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ ரோத்தமம், 
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்"
வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,