oru murai narada maharishi kavalaiyuran kanappattar | ஒரு முறை நாரத மகரிஷி கவலையுடன் காணப்பட்டார்

நாராயண ! நாராயண !

*ஒரு முறை நாரத -மகரிஷி கவலையுடன் காணப்பட்டார்.*

அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள்-.

நாரதர் -> தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார்.

மஹாலக்ஷ்மி ---> நாரதா அப்படி என்றால் ஒன்று செய். ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள்.

நாரதரும் ரிஷிகேசம் வந்தார் .

கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் என்ன நாரதரே சௌக்கியமா என்றது பேசும் மீனை அதிசியமாக பார்த்துக்கொண்டே நாரதர் ம்ம் எதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார்.

மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே என்றது.

நாரதர் --> ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார்.

மீன்-->நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் நாரதர் ஆனால் மீன் ---> ஒரே தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது. 

மீன் --->-மீன் கூறியதை கேட்டதும் --> நாரதருக்கு கோபம் வந்தது, என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா ?

நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது ?

மீன் --> சிரித்துக்கொண்டே நீர் மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க
நாரதர் வியப்புடன் மீனை பார்க்க மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து.

நாரதா---> என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது.

கலகம் என்பது அவர் அவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது. அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன் யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய்.

உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும், என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் .

நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித கங்கையில் நிம்மதியாக ஆனந்தமாக நீராடினார். என் கருத்து என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம். அதுவே நாளும் பேரின்பம் யாவும் நலமாகவும் முடியும் .

ஓம் நமோ நாராயணா !


Narathar Makarisi


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,