பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுவனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது (தும்பிக்கை எங்கே காணோம்!) அதான் நமக்கு கைகள் இருகின்றதே உடைத்து விட்டோம்!.

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம்! வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.
வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது.

குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...