Coconut Poo | தேங்காய் பூ ரகசியம் தெரியுமா?!

தேங்காய் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

தேங்காய், இளநீர் பயன்பாடு எல்லாம் பரவலாகவே இருக்கிறது. ஆனால், ‘தேங்காய் பூ’ எதற்காக, என்ன பலன், வெறுமனே சுவை மட்டுமா போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கலாம்.இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் தீபா.

* பருவ கால தொற்றுநோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப்பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்
படுத்தலாம்.
Coconut Poo



* தேங்காய் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.

* புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது தேங்காய்ப்பூ.

* தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.

* வழக்கமாக தேங்காயை உண்கிறோம். இளநீராகவும் உண்கிறோம். தேங்காய்ப்பூ என்பது என்னவென்று சிலருக்கு குழப்பம் இருக்கும். முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும்.

* தேங்காய்ப்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கிறது. தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.

* தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது.

* சிறுநீரக பாதிப்பை குறைக்கும் திறன் தேங்காய் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம்.

* அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப்பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிக எனர்ஜி கிடைக்கும்.

* இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.

* நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கிய பங்கு தேங்காய்ப்பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.

* பெண்களுக்கு மாதவிடாய் நேரம் தவிர வெள்ளைப்படுதல் இருப்பதால் இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்வதால் சீர் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிகநாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.

* இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப்பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு. உடற்சூட்டினால் ஏற்படும் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதையும் தேங்காய்ப்பூ தடுக்கிறது.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...