Nearest places to Visit in Madurai | மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க?

மதுரையில் என்ன இருக்கு சுத்தி பார்க்க என்று கேள்வியோடு வெளியூர் சுற்றுலா செல்லும் மதுரை வாசிகளே! என்ன இல்லை மதுரையில்.

நீங்கள் ஆன்மீகவாதியா? தொல்லியல் மற்றும் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவரா? மானுடவியல் மீது ஆர்வம் கொண்டவரா? பசுமை மற்றும் பல்லுயிர்கள் மீது ஆர்வம் கொண்டவரா?

அட எதுவும் இல்லைங்க, அப்படியே வண்டியெடுத்துட்டு போயி எங்கையாவது ஒரு நகர வாசமற்ற கிராமத்துல தங்கி குளிச்சு கும்மாளம் போடா மதுரையில் இடமிருக்கா என கேட்பவரா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதுரை பல்வேறு முகங்களை கொண்டு இருக்கிறது. அதிக செலவில்லாமல் மதுரை மாவட்டத்தில் நீங்கள் சுற்றி பார்க்க கூடிய இடங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

வரலாற்று மற்றும் தொல்லியல் சிறப்பிடங்கள்:
1. கீழடி
2. அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம்
3. நரசிங்கப்படி ஈமக்காடு
4. பெருங்காமநல்லூர் நினைவுத்தூண்
5. யானை மலை சமண படுகை
6. கீழக்குயில்குடி மலை அய்யனார் மற்றும் சமண படுகை
7. முத்துப்பட்டி மலை சமணப்படுகை
8. மாங்குளம் - மீனாட்சிபுரம் சமணப்படுகை
9. அரிட்டாபட்டி மலை சமணப்படுகை
10. திருப்பரங்குன்றம் சமணப்படுகை
11. மேட்டுப்படி சித்தர்மலை சமணப்படுகை
12. மாடக்குளம் கண்மாய் கல்தூண்
13. வரிச்சூர் குன்னத்தூர் மலை படுகை
14. விக்கிரமங்கலம் நடுமுதலைக்குளம் மலை சமணப்படுகை
15. அழகர்மலை - கிடாரிபட்டி சமணப்படுகை
16. குப்பல்நத்தம் மலை சமணப்படுகை
17. கருங்காலக்குடி சமணப்படுகை
18. கீழவளவு மலை சமணப்படுகை
19. காரைக்கேணி சமணர் படுகை
20. மலைப்பட்டி புத்தூர்மலை சமணர்படுகை
21. கோவலன் பொட்டல்
22. மருதநாயகம் (கான்சா சாகிப்) கல்லறை, சம்மட்டிபுரம்
23. உச்ச பறம்பு மலை வைரவர் கோவில்
24. ஈசன் கோவில், கருங்காலக்குடி
25. அக்னீஸ்வரன் கோவில், தேவன்குறிச்சி மலை
26.சாப்டூர் அரண்மனை
27.கபாலி மலை கோவில்
28. கொங்கர் புளியங்குளம் சமணப்படுகை
29. ஓவா மலை சமணப்படுகை, திருவாதவூர்
30. குருவித்துறை பாண்டியன் அணை (சிற்றணை)

கோவில்களும் பழமையான கட்டிடங்களும்:
1. மீனாட்சி அம்மன் கோவில்
2. அழகர் கோவில்
3. திருப்பரங்குன்றம்
4. திருவாதவூர் கோவில்
5. நரசிங்க பெருமாள் கோவில்
6. திருமோகூர் கோவில்
7. கொடிக்குளம் பெருமாள் கோவில்
8. திருவேடகம் கோவில்
9. திருமலைநாயக்கர் மகால் & அருங்காட்சியகம்
10. புதுமண்டபம்
11. ராணி மங்கம்மாள் சத்திரம் (காந்தி அருங்காட்சியகம்)
12. வைகை ஆற்று மைய மண்டபம்
13. நரசிங்கப்பட்டி ராமயண ஓவிய சாவடி
14. விளக்குத்தூன்
15 மதுரை வாயில் கோட்டை.

Madurai places to visit





No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...