Name of kochadai | கோச்சடை பெயர் காரணம்

கோச்சடை பெயர் காரணம் : கோவிச்சி சடையன் என்ற பெயரே பின்னர் கோச்சடை என்றானது.

பாண்டிய மன்னனிடம் பெருமான் பிரம்படி வாங்கிய கதை கோச்சடையில் தான் நடந்தது. கோச்சடையில் உள்ள மீனாட்சி கோவிலில் இறைவன் பிரம்படி வாங்குவது போன்ற சிலை அமைக்கப் பெற்றுள்ளது. பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழா மதுரையில் நடை பெறுகிறது. நாயக்கர்களின் ஆட்சியில் தான் இந்த திருவிழாவை மதுரைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

பாண்டிய மன்னர் கோவத்தோடு பெருமானை சாட்டையில் அடித்ததாள் இத்தளம் கோவிச்சி சடையன் என்ற பெயர் பெற்று பின்னர் கோச்சடை என்று மருவியது.

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் :
                                      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மதுரை மாநகரில் உள்ள மிகப் பழமையான கோயிலில் இதுவும் ஒன்று இது பாண்டியர் கால புராதன கோயில் ஆகும்.

இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிகவும் பழமையான காலத்தில் ஏற்பட்ட கோயில்தான் இது என்பதை உறுதி செய்கின்றனர்.

வேறு எந்த சிவதலத்திலும் இல்லாத பெருமைவாய்ந்த இரு வில்வ மரங்கள் இத்தலத்தில் உள்ளது. ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே ஒருங்கே அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இங்குள்ள ஆண் மரத்தின் ஒரு இணுக்கில் மூன்று வில்வ இலைகள் இருக்கும். இன்னொரு மரமான பெண் வில்வ மரத்தில் ஒரே இணுக்கில் 7 வில்வ இலைகள் வரை இருப்பது அதிசயம். பொதுவாக அரசமரமும் வேப்ப மரமும் ஒருங்கே அமையப்பெற்ற இடத்தில் விநாயகர் இருப்பது சிறப்பு. ஆனால் இங்கோ தமது தந்தைக்கு மிகவும் உகந்த வில்வ மரத்தினடியில் அதுவும் ஆண்பெண் என இரு மரங்களும் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் உள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.


kochadai-Madurai



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,