வாழையடி வாழையென உங்கள் குடும்பம் தழைக்க விருட்ச பரிகாரம்...!!!
உங்கள் பகுதியில் உள்ள கோவிலில் அரசமரம், வேம்புமரம் இரண்டையும் சேர்த்து கொடி போல வைத்து வளர்த்து விடுங்கள். அவ்வளவுதான் இது மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டியது.
வேம்பு, அரசும் சேர்ந்திருக்கும் மரங்களை நட்டவர்களின் குடும்பம் என்றும் மங்காத செல்வதோடு வாழ்வாங்கு வளமோடு வாழும் என சாஸ்திரம் தெளிவாக சொல்கிறது.
பிள்ளை செல்வம் இல்லாதவர்கள் வேம்பும், அரசும் இணைந்து இருக்கும் ஆலயம் சென்று அந்த விருட்சத்தை வழிபட்டு வாருங்கள். மழலை சத்தம் உங்கள் வீட்டில் கேட்பது உறுதி.
இந்த பரிகாரத்தை செய்ய, அதாவது மரக்கன்றுகளை நடும் நாள் வளர்பிறை தசமி திதியாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம்.
இந்த மரக்கன்றுகள் வளர வளர குடும்பம் சுபீட்சம் பெறுவதோடு மட்டும் அல்லாமல் மரக்கன்றுகளை வணங்கி வரும் சந்ததியினரும் வளமோடு வாழ்வார்கள் என்பது திண்ணம்.!
நமது முன்னோர்கள் இது மாதிரியான மரங்களை சேர்த்து வளர்த்து வளமாக முன்னாளில் வாழ்ந்துள்ளார்கள்.
ஆனால் தற்கால சூழலில் இந்த பழக்கம் வழக்கொழிந்து விட்டது. அதை நாம் நினைத்தால் மீண்டும் உயிர்ப்பிக்கலாம்..!!
நம் சந்ததியருக்கு நாம் செய்யும் உண்மையான புண்ணியம் என்பது இதுதான்.
பின்வரும் சந்ததிகள் இந்த மரத்தில் வணங்கி வருவதால் குழந்தை வரத்தை தீர்கமாக பெறலாம்.
உங்கள் சந்ததியில் நல்ல பிள்ளைகள் வளமோடு பிறக்கும்.
Maram |
No comments:
Post a Comment