ஆண்களே எளிதாக குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா சித்தர்கள் கூறும் அருமையான டிப்ஸ்

ஆண்களே எளிதாக குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா சித்தர்கள் கூறும் அருமையான டிப்ஸ்


தற்போது இருக்கும் நவீன உலகத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதால்,கடுமையான வேலைப்பளு சிறுவயதில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுதல் மற்றும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால் பல ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடுகிறது. 

இன்றைய காலகட்டத்தில் நீண்டநேரம் அமர்ந்தபடியே வேலை பார்க்கும் ஐடி துறை ஊழியர்களில் பலருக்கும் புத்திர பாக்கியம் இல்லாது போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் அவர்களுக்கு ஒரு மருத்துவ முறையை கூறுவார்களாம் அது என்னவென்றால்.

நல்லெண்ணெய்யை ஒரு குழிக் கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.  எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு, தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

ஆறிய எண்ணெய்யை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.  இதைச் செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 2 நிமிடத்துக்கு மேல் இந்த எண்ணெய் கால் விரலில் சேர்ந்திருக்கக் கூடாது.
 
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீகத் தன்மை கொண்டதாக உணர்வார்கள். 

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம்.  உடல் உஷ்ணத்தினால் உள்ளுக்குள் விந்து சுரப்பு குறைவதோடு விந்தணுக்களும் வலுவிழந்து போய் விடுகின்றன. நவநாகரிக டைட்டான ஜீன்ஸ் பேண்டுகளை அணிவதாலும் இந்த அவலம் ஏற்படுகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தைல வைத்தியம் அரிய வரப்பிரசாதமாகும். 

ஐ.டி. ஊழியர்கள், உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்துக்கு எண்ணெயை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மலட்டுத்தன்மை குறைபாடு நீங்கும். சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.





No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...