ஸ்ரீ மஹா விநாயகர் சதுர்த்தி பெருவிழா.
21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது.
பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:
- முல்லை/மாவிலை இலை - அறம் வளரும்.
- கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
- வில்வம் - இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
- அறுகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது.
- இலந்தை/ துளசி இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.*
- ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.*
- வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.*
- நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்.*
- கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.*
- அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.*
- எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
- மருதம் இலை - மகப்பேறு கிட்டும்.
- விஷ்ணுகிராந்தி இலை- நுண்ணறிவு கைவரப்பெறும்.
- மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
- தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
- மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
- அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
- ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
- தாழம்/ நெல்லி இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
- அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
- தவனம் ஜகர்ப்பூரஸ இலை - நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்.
இருபத்தொரு பத்திரங்களுரைக்கும் தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்
*மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.*
இவற்றை முன்கூட்டியே இருக்கும் இடத்தை அறிந்து வைத்து கொண்டு ஓர் நாள் முன்னதாக சிறிது பறித்து வினாயகர்க்கு அர்ச்சனை செய்யவும். அனைவருக்கும் மங்களங்கள் உண்டாகட்டும்.
விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளை பெற உதவும் இந்த 12 ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம்.
ஸ்லோகம் 1 :
*சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.*
ஸ்லோகம் 2 :
*ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.*
ஸ்லோகம் 3 :
*ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.*
ஸ்லோகம் 4 :
*ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.*
ஸ்லோகம் 5 :
*மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.*
ஸ்லோகம் 6 :
*கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.*
ஸ்லோகம் 7 :
*வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.*
ஸ்லோகம் 8 :
*அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.*
ஸ்லோகம் 9 :
*கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.*
ஸ்லோகம் 10 :
*பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.*
ஸ்லோகம் 11 :
*விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.*
ஸ்லோகம் 12 :
*வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.*
கரிசலாங்கண்ணி இலை |
முல்லை இலை |
1 comment:
Om vigneshwara nama
Post a Comment