கயிலாயத்தில் அனகோண்டா



அனகோண்டா என்றாலே அந்த பச்சை நிறப் பாம்புகள் நெளியும் திரைப்படம்தான் நினைவுக்கு வரும்!! ஆட்கொள்ளிகளாக திரைப்பங்களில் காட்டப் பெற்ற இப்பாம்புகள் உண்மையில் மனிதர்களை திண்பவை அல்ல, தவிர அனகோண்டா என்ற பாம்பினத்தின் "யுனெக்டெஸ் முரினெஸ்" என்ற ஒரு வகை பச்சை நிற பெரிய பாம்பையே படத்தில் காட்டினார்கள்,
இவ்வகை பாம்புகள் தற்போது அமேசான் காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன, ஆனால் இதனை விட பெரிய வகை மலைப் பாம்புகள் நம் நட்டிலும் வாழ்ந்திருக்கின்றன.
இவ்வகை *"பாம்புகள் யானைகளையே பிடித்து நொறுக்கி கொன்று விழுங்கும் வல்லமை உடையவைாக திகழ்ந்துள்ளன"* ஆதலால் இவற்றை *"ஆனை கொன்றான்"* என்பார்கள், அனகொண்டா என்ற பெயர் கூட ஆனைகொன்றான் என்பதன் மாற்றம் என்று கூட சொல்கிறார்கள். இது நிற்க,
இப்படி ஒரு ஆனை விழங்கும் பாம்பு கயிலாய மலைச்சாரலில் வாழ்வதாக எங்குடியாளும் திருஞானசம்பந்தப் பெருமான் கண்டு பாடுகின்றனர்
பெருமானது *"பொடி கொள் உருவர்"* என்ற கயிலாயப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் இக்குறிப்பு விளங்குகின்றது
*"பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த கரிய மிடற்றர் செய்ய மேனிக் கயிலை மலையாரே"* என்பது அத்தேவார வரிகள்
பெரியதாகிய ஒரு யானையை அரவு ஒன்று விழுங்கும் காட்சி காணக்கிடைப்பதும் பொழில்களின் இருள் சூழ்ந்ததுமான கயிலாய மலையார் என்று இறைவனைப் படுகின்றார் பெருமானார்.
இக்காட்சியை தேவாரத்தில் படித்து உவந்த சோழப் பெருவேந்தர் இராசராசரின் பட்டத்தரசியாராம் உலோகமாதேவியார்,
திருவையாற்றில் அவர் எடுப்பித்த *"வடகயிலை"* என்னும் ஆலயத்தில் இதனை காட்சி செய்துள்ளார், ஒருமுறை தருமையாதீன இளைய சன்னிதானம் சுவாமிகளுடன் திருவையாறு தரிசிக்கும் பேறு கிடைத்த பொழுது சுவாமிகள், வடகயிலையின் ஆட்கொண்டாரான துவார பாலகரின் திருவடியில் இக்காட்சி இருப்பதனை காட்டி மேற்சொன்ன தேவார வரிகளையும் விளக்கினார்கள்.
இதற்கு பிறகு கட்டப்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலிலும் இக்காட்சி மிகப்பெரிய அளவிற்கு சிற்பிகளால் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் கூறினார்கள்.
சிவாலயத்திற்குள் செல்லுமுன் இருபுறமும் இருக்கும் ஆட்கொண்டார் உய்யகொண்டார் என்னும் துவார பாலகர்கள் இருப்பார்கள், அவ்வகையில் தஞ்சை பெரிய கோயில் ஆட்கொண்டார்,
தன் திருவடியை அவரது ஆயுதத்தின் மீது ஊன்றியுள்ளார் அந்த ஆயுதத்தின் தண்டுப் பகுதியில் சுற்றியுள்ள பெரிய பாம்பு ஒன்று பெரிய யானையை விழுங்கும் படி காட்சி அளிக்கிறது!!
இத்தகு பெரிய உயிரினங்களையும் அநாயசமாக கையாளும் யாமே!! ஒருவருக்கு காவல் செய்கிறாம் என்றால் உள்ளே இருக்கும் சிவபரம்பொருள் எத்தனை பெரியவர் என்று உணர்ந்து கொள்"* என்று தத்துவார்த்தமாக *"விஸ்வம் பிரமாண்டம்"* என்று வியப்பு முத்திரை காட்டுவார் ஆட்கொண்டாரும் அவர்தம் இணையரும்.
தேவாரத்தில் கண்ட காட்சியை கோயில் சிற்பங்களில் வடித்து காட்டிய நந்தம் பெருமக்களை என்னென்று வாழ்த்துவது!?
*திருச்சிற்றம்பலம்...



கருத்துகள் இல்லை:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...