மதுரையில் தற்போது அதிகம் அறியப்படாத சுற்றுலா மையங்களை, மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அரசு ஆய்வு நடத்தி வருகிறது.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய அரிட்டாபட்டியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தினால், கிராமியம், மலை, வரலாறு, இயற்கை, உயிரினங்களின் வாழ்வியல், நீரியல், விவசாயம் என பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.
மலைகளே அழகிய அரண்கழிஞ்சமலை, ராமாயி மலை, வகுத்து பிள்ளையார் மலை, ஆப்டான்மலை, கழுகுமலை, தேன்கூடுமலை, கூககத்திமலை என 7 மலைகள் அரிட்டாபட்டிக்கு அழகு சேர்க்கின்றன.
மலைகள் தொடராக இருப்பதால் மலைப்பகுதி சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்புக்குரிய வசிப்பிடமாக இது உள்ளது. மலைகளின் மேல்பகுதியில் புதுக்குளம், மேலகுளம், மேல்தர்மம், கொல்லங்குளம் என சில கண்மாய்கள், நீர்சுனைகள் உள்ளன.
இங்கு தண்ணீரை சேமிக்கும் வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்தி உள்ளனர். ஊற்றுத் தண்ணீரில் நெல்விவசாயம் நடக்கிறது.பல்லுயிர்களின் சரணாலயம்மதுரை மாவட்டத்தில் விதவிதமான பறவைகளை பார்க்கும் இடம் அரிட்டாபட்டி. ஒரு காலத்தில் இங்கு பிணம் தின்னி கழுகு இருந்திருக்கிறது.
ராஜாளி, குட்டைக் கால்பாம்பு தின்னி கழுகு, தேன்பருந்து, கரும்பருந்து, இந்திய புள்ளி கழுகு, வெள்ளைக்கண் வைரி, லகுடுவல்லுாறு, செந்தலை வல்லுாறு, ராபக்கி, கூகை, மீன்தின்னி கூகை என 175 வகை பறவைகள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள பெருமாள்மலையில் இருந்து புள்ளிமான்கள், மிளா இங்கு வருகிறது. இங்கிருந்து பார்த்தால் அழர்கோயில் மலைத் தொடர் கண்களுக்கு இனிமை தரும். மலைப்பாறைகள் அதிகம் இருப்பதால் இங்கு பாம்புகளும் அதிகம்.
No comments:
Post a Comment