ஆசன வாய் (மலம் வெளியேறும் இடம்) க்கும் ...
மூக்கிற்க்கும் தொண்டையில் உள்ள சுவாசக் குழாயையும் இணைக்கும் துவாரமாக அந்நாக்கில் (நாக்கிற்கு மேற்புறம் இருக்கும் உட்புற மண்டை ஓடு) இருக்கும் அந்த பகுதியில் இருக்கும் கோழைக்கும் ஓர் நேரடி தொடர்புள்ளது...
மலம் முறையாக வெளியேறினால் அந்நாக்கில் உள்ள கோழை அகன்று...
நுரையீரல் முறையுடன் இயங்கும்...
மலச்சிக்கல் இருக்கும் போது...
அந்நாக்கில் கோழை அதிகம் இருக்கும்...
சில சமயங்களில் மலக் குடல் சீராக இருக்கும்...
ஆனால் நுரையீரலில் கழிவுகள் (அதாங்க சளி) மருந்து மாத்திரைகளை உட்கொண்டு மண்டிக் கிடக்கும்...
அப்போதும் அந்நாக்கில் கோழை அதிகம் இருக்கும்...
இதனால் மலச்சிக்கலும் ஏற்படும்...
சுவாசக் கோளாறு & மலச்சிக்கல் ...
இவை இரண்டிற்கும் நம் முன்னோர்கள் எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தனர்...
மலம் கழிக்க சில தூரம் நடந்து சென்றனர்...
காலையில் நடப்பதால் சுவாசம் மேம்படும் கோழை அகலும்...
மலக்குடலில் இருந்து அபான வாயு பிரியும்...
மலம் எளிதாக வெளியேறும்...
இதெல்லாம் நம் முன்னோர்கள் தெரிந்து செய்தார்களா?
தெரியாமல் செய்தார்களா? என்று தெரியவில்லை...
ஆனால் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடந்து சென்று மலம் கழித்தது முக்கிய பங்கு வகிக்கிறது...
நாம தான் வீட்லயே கக்கூஸ் கட்டி நாகரீகமா வாழ்றோம்ல, அதனால ...
நாம என்ன செய்யலாம் என்பவர்களுக்கு சில யோசனைகள்...
சித்த வித்தை கற்றவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளில் முதன்மையான ஒன்று தான் கோழை_அகற்றுதல் ...
மலம் கழித்தல்
பல் துலக்குதல்
அதன் பின்னர்...
அந்நாக்கில் கை வைத்து பாருங்கள்...
கொழ கொழப்பா ஏதோ ஒன்று தெரியும்...
அது தான் கோழை...
அதை மெதுவாக உங்கள் கட்டை விரலால் தேய்த்து கொடுக்க...
அடிவயிற்றில் இருந்து குமட்டிக் கொண்டு...
வாந்தி வருவது போல்...
நுரையீரலில் உள்ள சளி மற்றும் அந்நாக்கில் உள்ள கோழை இரண்டும் ஒரே நேரத்தில் வெளியேறும்...
ஒரு வேலை முதல் நாள் இரவு உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால்...
நிச்சயமாக வாந்தி வரும்...
மலம் கழிக்காமல் செய்யும் பட்சத்தில் ...
வாயு கோளாறுகள் ஏற்படும்...
அதனால் தான் மலம் கழித்த பின்னர் இதனை செய்யச் சொல்கிறார்கள்...
எனக்கு மலமே சரியா வராதே நான் எப்படி இதை செய்வது என்று பலர் கேட்கலாம்...
இங்கு நிறைய பாரம்பரிய மருத்துவர்கள் எளிய முறையில் மலம் வெளியேறும் முறைகளை கூறி இருக்கிறார்கள்...
அதில் ஏதாவது ஒன்றை பின்பற்றவும்...
ரொம்ப சாதாரணமா ஒரு விடயத்தை சொல்றேன் முயற்சி செய்து பாருங்கள்...
மலம் கழிக்கும் முன் ஐந்து நிமிடங்களாவது வெறும் காலில் நடைபயிற்சி செய்யுங்கள்...
மலம் கழிக்கும் முன்...
கால் முட்டி முதல் பாதம் வரை நணையும் படி குளிர்ந்த நீர் ஊற்றி அலம்புங்கள்...
மலம் கழிக்க அமர்ந்த உடன் ஆசன வாயை அலம்புங்கள்...
சிரமமே இல்லாமல் மலம் வெளியேறும்...
இதெல்லாம் கூடவா சார் பொதுவெளியில் எழுதுவார்கள் என்று பலர் நினைக்கலாம்...
என்னங்க செய்றது...
ஏன் மலம் கழிக்க வேண்டும்?
எப்படி மலம் கழிக்க வேண்டும்? என்று கூடத் தெரியாத கூமுட்டையாக நாகரீகம் கருதி துவங்கி இன்று வீட்டில் அடிப்படை உறுப்பினராக வெஸ்டர்ன் டாய்லெட் வைத்திருக்கும் நோயாளிகளுக்கு இதை எல்லாம் யார் தான் சொல்லித் தருவா..?
இந்த விடயங்கள் எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை...
அதனால் இதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை எனக்குண்டு...
இதெல்லாம் செய்தாலே போதும் மருத்துவமனை செல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்...
இந்த ரகசியத்தை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர்...
இதை தடுக்கத் தான் நவீன மருத்துவம்...
Tongue_cleaner என்று நாக்கு வழிக்க ஒரு கம்பியை கொண்டு வந்து சேர்த்து...
நம் முன்னோர்கள் அந்நாக்கை சுத்தம் செய்தார்கள்...
ஆனால் இவர்களோ டங் கிளீனர் வைத்து நாக்கின் மேற்பகுதியில் உள்ள நிறங்களை சுத்தம் செய்ய வைத்தனர்...
அதனாலும் நண்மைகள் விழைந்ததால்...
காலப் போக்கில் அதையும் திரைப்படங்களில் காட்டுவதை நிறுத்தினர்...
நம்மவர்களும் கோழையை அகற்ற வேண்டும் என்று கூடத் தெரியாதவர்களாகவே வளர்கின்றனர்...
நாளை அதிகாலை முதல் இதை முயற்சி செய்து பாருங்கள்...
நம் சித்தர்கள் ஏன் கோழை அகற்றுதலை வாழ்வியல் நெறியாக பின்பற்றினர் என்று புரியும்.
No comments:
Post a Comment