அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியிலுள்ள ஊர்களின் பெயர்கள் அழகர்கோயிலோடும், நீர்நிலையோடும் தொடர்புடைய பெயர்களாகவே இருப்பதை பார்க்கலாம். தல்லாகுளம், கோசாகுளம் புதூர், கொடிக்குளம், கடச்சனேந்தல், காதக்கிணறு, செம்பியானேந்தல், சுந்தரராஜன்பட்டி, திருவிழான்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி, திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்). இப்போது பேரில்தான் கிணறும், குளமும் இருக்கிறது.
பொய்கைக்கரைப்பட்டி தெப்பம் மிக பெரியது. இதன் நடுவே சிறிய மையமண்டபம் அமைந்துள்ளது. பொய்கைக்கரைப்பட்டி குளக்கரையில் அமைந்துள்ள கல்வெட்டு அந்தக் காலத்தில் அழகர்கோயிலுக்கு நந்தவனங்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. ஆனால், இன்று அழகர்மலையடிவாரத்தில் உள்ள ஊர்கள் வீட்டடி மனையாக மாறிக்கொண்டுவருகிறது.
பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம் பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் வற்றிக் கிடந்தது. நாம் வருடந்தோறும் மாசிமகத்தன்று தெப்பத்திருவிழா கொண்டாடி பெருமாளை தெப்பக்குளத்துக்கரையைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கிறோம். பல வருடங்களுக்குப் பிறகு நிறைந்து காணப்படும் பொய்கைகரைப்பட்டி குளத்தில் நிரந்தரமாக நீர் நிறைந்திருக்க வழிவகை செய்ய வேண்டும். பொய்கையை பொய்த்துபோக விடக்கூடாது. நீரின்றி அமையாது…
No comments:
Post a Comment