Chidambaram Nataraja Kovil Arthajama Puja | சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை

சிதம்பரம் நடராஜர் கோவில் அர்த்தஜாம பூஜை (இரவு பூஜை) மிக விசேஷமானது. அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்வு. சைவத்தின் தலைநகராக கொண்டாப்படும் சிதம்பரத்தில் அர்த்தஜாமம் மிக தாமதாக அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு மேல் நடைப்பெறும். இதனைக் கண்டால் அனைத்து சிவாலயங்களிலும் அர்த்தஜாமம் கண்ட பலனை தரும்.

அனைத்து கோயில்களிலும் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் பைரவ மூர்த்திக்கு வழிபாடு நடத்தப்படும். அவருடைய வழிபாட்டுடன் அன்றைய பூஜை முடிந்ததாகக் கருதப்படும்.

சிதம்பரத்தில் நடராஜர் பள்ளியறை சேர்ந்த பின் பிரம்மசண்டிகேஸ்வரர், பைரவ வழிபாட்டுக்குப் பிறகு, அர்த்தஜாம அழகர் எனப்படும் க்ஷேத்திர பாலகன் பூஜிக்கப்படுகிறார்.

ஜோதிடன் ஒருவன் பலரது சாபத்தால் மறுபிறவியில் பல்லியாகப் பிறந்தான். அப்படி அவன் பிறந்த இடம் சிதம்பரம். சித்சபையின் கொடுங்கைகளில் வசித்த பல்லிக்கு புண்ணியவசத்தால் சிவ பக்தி உண்டானது,

நடராஜப் பெருமானின் திருவருள் கைகூடியது, அழகிய சிவகணமாகும் பேறு கிடைத்தது, கோயிலை இரவில் காக்கும் வேலையும் கிடைக்கப்பெற்றது. அவரே அர்த்தஜாம அழகர்.

சித்சபையின் ஈசான பாகத்தில் தேவ சபையின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள மாடத்தில், சித்சபையை நோக்கியவாறு அர்த்தஜாம அழகர் காட்சி தருகிறார்.
சித்சபையின் கூரையில் பிரம்மசண்டிகேஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் அந்த பல்லியும் பொறிக்கப்பட்டுள்ளது.

அர்த்தஜாம அழகர், ஈஸ்வர அம்சம் என்றும், பைரவ அம்சம் என்றும், துவாரதேவதா அம்சம் என்றும், தர்மராஜர் அம்சம் என்றும் பலவித கருத்துக்கள் உண்டு.

நாள்தோறும் பள்ளியறைபூஜை, பைரவ பூஜையைத் தொடர்ந்து, அர்த்தசாம அழகருக்கு வழிபாடு நடைபெறும். அப்போது மணம் பொருந்திய தாம்பூலத்தை நைவேத்தியம் செய்வார்கள்.

இவர் பல்லி வடிவில் வழிபட்ட ஈஸ்வரன், பல்லிகேஸ்வரர் என்ற பெயரில் இரண்டாம் பிராகாரத்தில் தட்சிணா மூர்த்திக்கு அருகில் எழுந்தருளியுள்ளார்.
அர்த்தஜாம அழகரை வழிபட்டால், களவு போன அல்லது தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைத்திடும், செல்வங்கள் நிலைத்து நிற்கும், கடன் தொல்லைகள் நீங்கும், செல்வங்கள் சேர்ந்திடும் என்பது நம்பிக்கை.
திருச்சிற்றம்பலம்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,