Take four drops of essential oil and leave it in urine. | நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து சிறுநீரில் விட்டு பாருங்கள்.

நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும், அதிர்ச்சி..?


பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை அல்லது சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்து, டாக்டர் கூறுவதை கேட்டு நம்முடைய பிரச்சனையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்
எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள் எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்.

No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...