Iraavanan sithaiyai maraiththu vaiththa kukai | இராவணன் சீதையை மறைத்து வைத்த குகை.

இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை....

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீட்டர் தொலைவான மலையில்தான் இந்த இராவணன் குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணி வரைதான் செல்ல முடியும். இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்து விடுவார்கள் ....

இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.... செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும். இந்த படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் அரை மணி நேரப்பயணத்தில் உச்சியை அடைந்து விடலாம்.

குகைக்கு செல்லும் பாதையில் குருவிகளின் சத்தங்களும் நீர் வீழ்ச்சிகளின் சத்தங்கள் மனங்களை சாந்தப் படுத்துகின்றன. உயரத்தை சென்றடை ஏதோ மகிழ்ச்சி மெது மெதுவாக குகையை நோக்கி கால்கள் நகர்கின்றன.... சிறிது தூரத்தில் படிகற்கள் இல்லாமல் பாறைகளின் நடுவே செல்ல வேண்டும்.......

அதன் பின் இருண்ட குகைகள் செல்கின்றோம்.... ஒரே இருட்டு ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கி வைத்தால் போல் குகை... அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய ஔி உள்ளே நுழைகின்றது......

ஞானிகள் முனிவர்கள் ஏன் குகைகள் தியானம் செய்தார்கள் என்ற என்பது அந்த குகைக்குள் செல்லும் போது மனதில் ஒரு அமைதி சிறிது தூரம் உள்ளே நகரும் போது குருவிகள் சத்தம் மட்டுமே கேட்கின்றது..... குகை ஒரே இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆனால் மனதில் சந்தோசம் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த குகைக்கு சென்று வந்தால் நீங்கள் பாக்கியம் பெற்றவர்களே....

Iraavanan Kukai


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,