அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக்கிடக்கு.



ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார். அதனால் தினமும் வீட்டுக்கு வர கொஞ்சம் தாமதம் ஆனது. அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது வெறுப்பாகிப் போன அவரது மனைவி,

அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக்கிடக்கு......???

ஒரு நாளை போல இவ்வளவு தாமதமாக ஆக வீட்டுக்கு திரும்பி வருகிறார். தினமும் அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க " என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார். கோபமடைந்த மனைவி, முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்.

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார். மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது. உடனே மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா, உபன்யாசத்துக்குப் போனேன் என்று சொல்கிறீர்கள்... என்ன சொன்னாங்கன்னு கேட்டா..... ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க.

நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீர் மாதிரித் தான்.. எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள். அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது... "நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேணா நிரப்ப முடியாம போகலாம். ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு.

அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கை எல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார். புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்".

No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...