வலம்புரி சங்கு



1. விநாயகருக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட உடலில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும் .
2. வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை > பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

3. தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட்/தொட்டி /குளம் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.
4. கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்.
5. அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன்
மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர தொல்லைகள் நீங்கும் .

6.எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.
7. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். 

8.பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது,பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்..

9.ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை +தேனு+ என்பார்கள்.
{இரண்டாவது கன்று} பிரசவித்ததும் அதற்கு கோ'' + என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்,

* அகவே பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்...
10. முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.
11. வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் ஒரு மனிதனுக்கு செய்யப்பட்டு இருந்தால் அவைகள் மழை நீரில் அல்லது கறந்த பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும் ....
12. வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைத்து வழிபடலாம்...
13. ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை வாசற்படியில் தெளிக்கவும்.
14.வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...