Tirupur Sri Sukreeswarar Temple | திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவில்

திருப்பூர் மாநகர் அருகில் சுமார் 2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் இருப்பது எத்தனை திருப்பூர் மக்களுக்கு தெரியும்..?

திருப்பூர் கூலிபாளையத்தில் (வித்ய விகாஸ் பள்ளிக்கு நேர் பின்பு) உள்ளது இந்த பழமையான சோழர்கள் உருவாக்கிய கோவில்... இப்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது..

இதன் சிறப்பு:
1. இரண்டு நந்தி கொண்ட கோவில் இது.
2. ஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.
3. இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று கூறப்படுகிறது.
4. இந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
5. இக்கோவிலின் வரலாறு: சுக்ரீவர் ராவணனை அளிக்க செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.

இன்னும் பல சிறப்பு வாய்ந்த திருப்பூர் கோவில் திருப்பூர் மக்களுக்கே தெரியாமல் உள்ளது.

No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...