இத்தலத்தின் தலவிருட்சம் கல் வாழை. இக்கல் வாழை தல விருட்சம் அறுபத்து நான்கு சதுர் யுகங்களாக தளர்ந்து வளர்ந்து வருகிறது. வாழையைத் தல விருட்சமாக பெற்றிருக்கும் கோயில் இதுவொன்றே!
பைஞ்ஞீலி என்பதற்கு பசுமையான ஞீலி வாழையென்பது பொருள்சப்தமாதர்கள் வழிபட்ட தலம் இந்த வாழைமரத்திற்கு பரிகார பூஜை செய்தால் திருமணத்தடை நீங்கிடும்.
திருச்சி மண்ணச்சநல்லூருக்கு வடமேற்கே 10 கிமீ தொலைவில் உள்ளது
பிச்சாண்டர் ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது
திருமணம் கைகூட வாழை பரிகார பூஜை
இக்கோயிலில் இரு அம்மன் சன்னதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப்பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படும். இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க, ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள். -பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.
எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையா.சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்
No comments:
Post a Comment