Utthumalai Balasubramania Thirukovil | ஸ்ரீசக்கரம்

மாங்கனி நகர் எனப் பெயர் பெற்ற சேலம் நகரத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் வழியான திருச்சி ரோட்டிலுள்ள சீலநாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் அற்புதமான ஆன்மிகத் தலம் தான் ஸ்தல மலை எனும் ஊத்துமலை.m

கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலசுப்ரமணியரின் கருணை ததும்பும் அழகுத் திருமுகம், அங்கு வரும் அனைத்துப் பக்தர்களின் துயரங்களையும் அடியோடு நீக்கி நிம்மதியைத் தரும். அமைதியான சூழலில், பசுமையான மரங்கள் சாமரம் வீச, சித்தர் பெருமான்களின் சுவாசம் நிறைந்த ஊத்துமலையின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது, அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.

அகிலமெங்கும் ஆட்சி புரிந்து சகல சுபீட்சத்தையும் வாரி வழங்குகின்றன அம்மனின் அம்சமான ஸ்ரீசக்கரம். முனிவர்களில் மாமுனிவரான அகத்தியரால், ஊத்துமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம், ஸ்ரீசக்கர தேவியாக இருந்து அருள்பாலிக்கிறது.

புராணக் கதையின்படி (5 ஆயிரம் வருடங்களுக்கு முன்) தாழ்ந்திருந்த தென்னாட்டை உயர்த்தும் பொருட்டு, சிவபெருமானின் கட்டளையை ஏற்று, அகத்தியர் பொதிகை மலை நோக்கி விஜயம் செய்தார். அப்போது, அமைதி கொஞ்சும் இவ்வனத்தைக் கண்டு, இங்கேயே ஆசிரமம் அமைத்து எம்பெருமானை வழிபட்டார். அகத்தியர் மட்டுமின்றி சித்தரில் சிறந்தவரான போகர், புலிப்பாணி, கபிலர், ரேணுகர் ஆகிய பஞ்சாச்சாரியார்கள் (ஐவர்), இங்குள்ள குகையில் அமர்ந்து தவம் செய்து வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தின் சிறப்பு சொல்லில் அடங்காது.

இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், சகல தோஷங்களையும் போக்கித் தனம் தரும், சக்ரமஹா காலபைரவரின் பிரமாண்ட திரு உருவம். ஸ்ரீசக்கரம் அமைந்திருக்கும் ரத்தினக் கோட்டையின் ஆவரண தேவதையாக.. அதாவது காக்கும் தெய்வமாக அமைந் திருக்கிறார் இந்த கால பைரவர்.

அகத்தியரால் பாறையில் செங்குத்து நிலையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் சர்வரோக ஹா சக்கரம் ஆக அமைந்துள்ளது. அதாவது மனிதனின் சகலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்ட மகா சக்கரம் இது. முறைப் படி இச்சக்கரத்தைப் பூஜித்து வருபவர்களின் வாழ்வில் வரும் இன்னல்கள் தீர்த்து சகல சவு பாக்கியம் கிடைக்கும். அகத்தியருடன் இணைந்து அவருடைய மனைவி லோபா முத்ரா மாதாவும் இங்கு வழிபாடு செய்துள்ளார்.

அகத்தியர் பெருமான் ஸ்ரீவித்யா ரகசியங்களை சித்தர்களுக்கு உபதேசித்த அற்புத தலம் இது. முக்கியமாக முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் ‘ககண மார்க்கப் பிரயோகம்’ எனும் வான் வெளியில் சஞ்சரிக்கும் அற்புதமான மந்திரத்தை உபதேசித்ததால் இன்றும் நம்மிடையே கண்ணுக்குத் தெரியாமல் சித்தர்கள் வலம் வந்து நமக்கு நன்மைகளை செய்து வருவது இத்தலத்தின் சிறப்பு.

ஸ்ரீசக்கரம் உள்ள பாறையை அடுத்துள்ள குகையில் அகத்தியர் மற்றும் போகர் முதலான சித்தர்கள் அமர்ந்து தவம் செய்தனர். இங்கு அவர்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்று வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டுள்ளது. மேலும் சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற பலவிதமான நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.

இங்கு அமைந்துள்ள காலபைரவர் சன்னிதி, சகல தோஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது. கால பைரவரின் சிலை தமிழ் நாட்டிலேயே இங்குதான் பெரியதாக உள்ளது. எட்டுக்கைகளுடன், அமைதி தவழும் முகத்துடன் காலபைரவர் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வேண்டித் தொழுதால் அவர் அருளைப் பெறலாம்.

காலபைரவருக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கும் சிறப்பு கலச பூஜை, வலம்புரி சங்கு அபிஷேகம், ஆகர்ஷண பைரவர் பூஜை, சகஸ்ரநாமம் அர்ச்சனை, குருஜி பூஜை, லட்சார்ச்சனை, புஷ்ப அபிஷேகம், 108 கலச பூஜை, ருத்ராட்ச பூஜை ஆகியவற்றில் கலந்து கொண்டு, தோஷம் நீங்கி சுபீட்சம் பெறலாம்.
ஆலய தல விருட்சங்களாக நாவல் மரமும், அரசமரமும், மருதமரமும் உள்ளன.m

அகத்தியர் பூஜித்த ஸ்ரீசக்கரம் : சேலம் - ஊத்துமலை ; ஸ்தல மலை எனும் ஊத்துமலையில் சித்தர் அகத்தியர் பெருமான் மற்றும் அவரின் மனைவி லோபமுத்திரா , போகர், போகரின் சீடர் புலிப்பாணி, ரேணுகர், கபிலர் என சித்தர்களின் தவம் செய்த இடமாகும்.

ஸ்ரீவித்யா- ஸ்ரீ சக்கரம் உபாசனை பெற்ற பின்பு தம் கரங்களால் ஸ்ரீசக்கரம் அமைத்து பூசித்த அருமையான ஆலயம்..

ஒரே பாறை மீது புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்கரம், சிவலிங்கம், நந்தி, ஆசிரமம், அகத்தியர், ரிசி பத்தினி, மற்றும் பல வகையான இயற்கைக் காட்சிகள். இடம் ஊத்துமலை, சேலம் மாவட்டம்.

கபிலர் தியான குகை: அகத்தியர், கபிலர் உள்ளிட்ட பல சித்தர்கள் தியானம் செய்த, பாறை நீர் ஊற்றுடன் கூடிய அமைதியான தியான குகை, கபிலர் தியான குகை. இடம் ஊத்துமலை, சேலம்..

ஊத்துமலை அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் எழுதிய இடமாக நம்பப்படுகிறது...

சேலத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ஊத்துமலை உள்ளது.. விநாயகா மிசன் 1008 லிங்கம் - லிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துமலை உள்ளது. அதே போல ஊத்துமலையிலிருந்து சாந்தானந்த சாமிகளின் -கந்தாசிரமம் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..

தியான குகையில் அமாவாசை - பவுர்ணமி திதிகளில் அருமையான அனுபவங்களை பெறலாம்.. வந்து பாருங்கள்.

ஊத்துமலை சுமார் 2000 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. அகஸ்தியர் இங்கு வந்து மலையை குடைந்து ஸ்ரீசக்கரம் உருவாக்கியிருக்கிறார் அதோடு அவருடைய பத்னி லோபாமுத்ரா தேவியுடன் தான் இருப்பது போலவும் தண்ட கமண்டலுடன் வடிவமைத்திருக்கிறார்.

அகஸ்தியர் கபிலமுனி சுகபரம்ம ரிஷியும் வந்திருப்பதாக கல்வெட்டுகளில் உள்ளது. மேலும் சுகர் பிரம்ம ரிஷி இங்கு வந்த பிறகு சேலம் சுகவனேஸ்வரரிடம் வந்நிருந்து தன் சாபத்தை போக்கிக்கொண்டதாக சேலம் சுகவனேஸ்வரர் புராணம் கூறுகிறது.

இவர்கள் தவிர சப்த ரிஷிகள் மற்றும் கரடி சித்தர் போகர் கன்வர் போன்ற மஹரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்து உள்ளார்கள் என்று புராண கதையாக இங்கு சொல்கிறார்கள். அதற்கு சான்றாக சப்த ஏழு வித ஊற்றுகளும் இந்த ஊத்துமலையில் உள்ளது அதனால்தான் இந்த மலைக்கு ஊத்து-மலை ஊத்துமலை என்று பெயர் வழங்கலாயிற்று.

இந்த ஏழு ஊற்றுகளிலும் உள்ள தண்ணீர் நிறைந்த மருத்துவ குணங்கள் கொண்ட தண்ணீர் ஆகும். இந்த ஸ்ரீ சக்ர கோவிலுக்கு மேல் சென்றால் மலையின் உச்சி வரும் அங்கு பால சுப்ரமணியர்அருள்பாலிக்கிறார். மயிலை அரவணைத்து கொண்டு காக்ஷி தரும் முருகப்பெருமான். இந்த ஊத்துமவையில்மிகப்பெரிய கால பைரவர் சன்னதியும்
உண்டு.








No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...