மதுரையை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன்..!
மற்ற புண்ணிய தலங்களை விட மதுரைக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. என்னவென்றால், மற்ற புண்ணிய தலங்களில் உள்ள மண்ணில் சிவனின் திருவடி பட்டிருக்கும். சிவனது திருவடி படாத இடமே இல்லை. சிவனது 64 திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும் ஓன்றாகும். அதில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அதை அடைப்பதற்காக வந்தி என்ற பாட்டிக்காக சிவனே மதுரை மண்ணை தனது தனது தலையில் சுமந்திருப்பார். இதனால் மதுரைக்கு மட்டுமே சிவனது திருமுடியும், திருவடியும் பட்ட சிறப்பு உண்டு. இப்படி பஞ்சபூதத்திற்கும் தலைவனான சிவன் சுமந்த மதுரை மண்ணில் பஞ்சபூத சிவாலயங்கள் உள்ளன. இதை சிவனுக்கு உரிய சிவராத்திரியில் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நீர்- திருவாப்புடையார் கோயில் - செல்லூர்
- நிலம்-இம்மையில் நன்மைதருவார் கோயில், மேலமாசி வீதி
- நெருப்பு-தென்திருவாலவாய் கோயில்-தெற்கு மாசிவீதி
- காற்று-முக்தீஸ்வரர் கோயில் - தெப்பக்குளம்
- ஆகாயம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஆதிசொக்கநாதர் கோயில், சிம்மக்கல்
இதில் இம்மையில் நன்மைதருவார் கோயிலில் ஆரம்பித்து, மீனாட்சி கோயிலில் 4 சித்திரை வீதிகளை வலம் வந்து, ஆதிசொக்கநாதர், செல்லூர் திருவாப்புடையார் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், தெற்கு மாசிவீதி தென்திருவாலவாய் கோயில் வழியாக மறுபடியும் இம்மையில் நன்மைதருவார் கோயில் வருவது சிறப்பு. இப்படி வலம் வந்தால் கைலாயத்தை வலம் வந்த பலன் கிடைக்கும் என மதுரை புராணங்கள் கூறுகின்றது.
No comments:
Post a Comment