இடுகைகள்

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

படம்
276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம் - போன் சென்னை மாவட்டம் - 4 கோயில்  01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151. 03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670. 04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477. காஞ்சிபுரம் மாவட்டம் -12 கோயில்   05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084. 06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108. 08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல்

Karaikal Ammaiyar Temple

Karaikal Ammaiyar temple is located near the small town of Karaikal, Tamil Nadu, India in the union territory of Pondicherry. It is a Hindu Temple, dedicated to the goddess of Punithavathi. Karaikal Ammaiyar is one of the 63 Nayanmars. Mangani Tirunal festival (festival of mango fruit) in the Tamil month of Aani on the full moon day.

Consecration to Lord Ganesha with 21 types of leaves | 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை

படம்
ஸ்ரீ மஹா விநாயகர் சதுர்த்தி பெருவிழா. 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது. பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு: முல்லை/மாவிலை இலை - அறம் வளரும். கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும். வில்வம் - இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும். அறுகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது. இலந்தை/ துளசி இலை - கல்வியில் மேன்மையை அடையலாம்.* ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப்பெறும்.* வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.* நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்.* கண்டங்கத்தரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.* அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.* எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். மருதம் இலை - மகப்பேறு கிட்டும். விஷ்ணுகிராந்தி இலை- நுண்ணறிவு கைவரப்பெறும். மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும். தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்ட

History of Yamadharmarajan | எமதர்மராஜன் வரலாறு

படம்
உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு. அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன். அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்

Pradosha Kathai | பிரதோஷம் கதை

படம்
பிரதோஷம் அன்று மாலை சிவ தரிசனத்திற்கு கிளம்பும் முன் படியுங்க! மாலை 4.30க்கு எல்லாருமே பிரதோஷ தரிசனத்துக்கு புறப்படுவோம். அதன் மகிமையைத் தெரிந்து கொண்டு கிளம்புவோமா! அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான். அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான். அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான். பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள். அவளிடம் வந்த நந்தி, தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார். அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.